உலகெங்கிலும் இருந்து ஆயிரக்கணக்கான பங்கேற்பாளர்கள் தங்கள் புகைப்பட பதிவுகளுடன் கலந்துகொண்ட உலகின் சிறந்த சிரிப்பூட்டும் வனவிலங்கு புகைப்பட விருதுகளுக்கான போட்டி நடைபெற்றது. இதில், புளோரிடாவின் டம்பாவை சேர்ந்த மேரி மெகுவோன் அவர்களின் அணில் புகைப்படம் ஒட்டுமொத்தமாக வெற்றி பெற்றது.
8 பிரிவுகளில், 41 படங்கள் இறுதிசுற்றுக்கு தேர்வு பெற்ற இப்போட்டியில் 14 படங்கள் சிறந்த சிரிப்பூட்டும் படங்களுக்கான விருதுகளை வென்றன.
போட்டியில் இடம்பெற்ற சில ஆச்சரியப்படக் கூடிய மற்றும் மிகவும் பாராட்டப்பட்ட படங்கள் இங்கே.
கண்டுபுடிச்சுட்டாங்கய்யா… என்பது போன்று தனது உடல்மொழியால் கூறும் இந்த அணில் படம் தான் இந்த ஆண்டிற்கான Overall winner விருதை வென்றது.
PHOTOGRAPH BY MARY MCGOWAN, Courtesy of Comedy Wildlife Photo Awards
கேமராவிற்கு
சுறாவின் புன்னகை! டான்யா ஹூப்பர்மேன் அவர்களின் புகைப்படம் கடல்வாழ் விலங்குகள் பிரிவில் தேர்வு செய்யப்பட்டது.
Credit: TANYA HOUPPERMANS, Courtesy of Comedy Wildlife Photo Awards
ஒரு ஆந்தை கண்ணாமூச்சி ஆடும் காட்சி- ஷேன் கீனா அவர்களின் புகைப்படம் பறவைகளுக்கான பிரிவில் சிறந்த புகைப்படமாக தேர்வு செய்யப்பட்டது.
Photograph: Shane Keena,
Courtesy of Comedy Wildlife Photo Awards
ஆச்சரியத்துடன் பார்க்கும் இந்த ஆந்தையின் புகைப்படம், இடம் – காபுர்தாலா, இந்தியா.
அர்ஷ்தீப் சிங் ஜூனியர் (இந்தியா) குழந்தைகளுக்கான பிரிவில் வென்றார்.
Credit: ARSHDEEP SINGH/CWPA/BARCROFT IMAGES
பின்லாந்தில் பழுப்பு கரடி குட்டிகளும், தாய் கரடியும்.
இந்த புகைப்படம் இணையத்திற்கான அற்புதமான புகைப்படமாக தேர்வு செய்யப்பட்டது.
Credit: VALTTERI MULKAHAIN/CWPA/BARCROFT IMAGES
ஒரு காண்டாமிருகம் மயில் இறகுடன் தோன்றியதுபோல் எடுக்கப்பட்ட புகைப்படம். இடம்- கோருமாரா தேசியப் பூங்கா, இந்தியா.
Credit: KALLOL MUKHERJEE/CWPA/BARCROFT IMAGES
பங்குச்சந்தையில் பலத்த அடியா… தேர்தலில் தோல்வியா… கரடியின் சோகத்தின் காரணம் தெரியவில்லை இடம் – அலாஸ்கா.
Credit: DANIELLE D’ERMO/CWPA/BARCROFT IMAGES
நார்வேயின் ஸ்வால்பர்ட்டில் பனிக்கரடி ஒன்று கேமராவில் புகைப்படக் கலைஞராகிய ஒரு தருணம்.
Photograbear?
Credit: ROIE GALITZ/CWPA/BARCROFT IMAGES
ஸ்வீடனில் கொஞ்சிக்கொண்டு டூயட் பாட விரும்பிய இரு பூக்கிளைகளுக்கு வில்லனான சிவப்பு அணில்.
Credit: GEERT WEGGEN/CWPA/BARCROFT IMAGES
மே… என எந்திரன் ரஜினியைப் போல் வில்லத்தனம் செய்கிறதோ இந்த கடமான்
Credit: BARNEY KOSZALKA/CWPA/BARCROFT IMAGES
இரு உடும்புகள் கட்டிக்கொள்ளும் காட்சி. இடம் -இலங்கை.
Credit: SERGEY SAVVI/CWPA/BARCROFT IMAGES
தாய்லாந்து தேசிய பூங்காவில் இரு குரங்குகள்.
விஜயகாந்த் படத்தை பார்த்திருக்குமோ?
Credit: SERGEY SAVVI/CWPA/BARCROFT IMAGES
வனவிலங்குகளின் நகைச்சுவை புகைப்பட விருதுகள் குழுமம் , இத்தகைய புகைப்படங்களை உள்ளடக்கி புத்தகம் ஒன்றை வெளியிடுகின்றது. இதன்மூலம் கிடைக்கும் வருமானம் “Born Free Foundation” என்ற தொண்டு நிறுவனத்துக்கு உதவும் வகையில் இருக்கும் என்றும் அது தெரிவித்திருக்கிறது.
இந்த படங்களை பற்றிய உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்.