28.5 C
Chennai
Thursday, May 2, 2024
Homeவரலாறுஉலகில் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக சேமித்து வைக்கப்பட்டுள்ள உணவுகள்! எங்கே? எப்படி?

உலகில் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக சேமித்து வைக்கப்பட்டுள்ள உணவுகள்! எங்கே? எப்படி?

கிமு 400 ல் இருந்த கல்லறை ஒன்றை சீன ஆய்வாளர் ஒருவர் திறந்தார். அதில், வெண்கலத்தாலான பாத்திரம் ஒன்று இருந்தது. அந்த பாத்திரத்தில் சூப்பு வைக்கப்பட்டிருந்ததை அவர் கண்டறிந்தார்.

NeoTamil on Google News

நாம் நமது வீடுகளில் குறிப்பிட்ட உணவுகளை சேமித்து வைப்பது வழக்கம். சிலர் ஒரு மாதத்திற்கான உணவு பொருட்களை சேமித்து வைப்பர். ஆனால், இன்றும் கிராமப் புறங்களில், ஒர் ஆண்டுக்கான உணவு பொருட்களை சேமித்து வைக்கும் பழக்கம் வழக்கத்தில் உள்ளது.

சரி… தற்போதைய சுழல்கள் இப்படி இருக்கையில் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக சில உணவு பொருட்கள் சேமித்து வைக்கப்பட்டுள்ளன என்பது உங்களால் நம்ப முடிகிறதா? நம்ப முடியவில்லை என்றால் இதை முழுவதும் படியுங்கள்.

ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் சேமித்து வைக்கப்பட்டுள்ள பழங்கால உணவுகள் என்னென்ன?

1
ரோமன் ஒயின் | Roman Wine

பழமை: 1650 ஆண்டுகள் பழமையானது!

உலகின் மிகவும் பழமையான ஒயின் ஸ்பியர் பாட்டில் ஒயின் தான். இது ஜெர்மனியில் உள்ள பிஃபால்ஸ் வரலாற்று அருங்காட்சியகத்தில் சீலிடப்பட்டு வைக்கப்பட்டுள்ளது. இது கிட்டத்தட்ட 1650 ஆண்டுகள் பழமையானது 1867 ஆம் ஆண்டு ஜெர்மனியின், ரைன்லேண்ட் பாலட்டினேட் பகுதியில் உள்ள குடியிருப்பில் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த ஒயின் ருசியாக இருக்க வாய்ப்பில்லை என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இந்த பாட்டில் இதுவரை திறக்கப்படவில்லை. ஆய்வாளர்கள் அதை திறக்காமலேயே நிறமாற்றத்தை வைத்து ஆய்வு செய்தனர்.

இந்த பாட்டிலுக்குள் பாக்டீரியாக்கள் செல்லவில்லை. ஆனால், மதுவுக்குள் இருந்த போதை தன்மை நீண்ட காலத்திற்கு முன்பே குறைந்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

2
ரோமன் ரொட்டி | Roman Bread

பழமை: 1900 ஆண்டுகள்

கி.பி 79 ல் வெனிசுலா மலையில் எரிமலை வெடித்து பேரழிவு ஏற்றபட்டது. அதில் அந்த மலையை சுற்றி இருந்த கிராமங்கள் பல அழிந்து போயின. அந்த பேராபத்தில் சிக்கிய பாம்பீ என்ற நகர் முற்றிலும் அழிந்தது. அந்த நகரில் பின்னாளில் பல பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. அந்த வகையில் தான் 1880 ஆம் ஆண்டில் கண்டெடுக்கப்பட்ட ரொட்டி ஒன்று இன்று வரை பாதுகாக்கப்பட்டு வருகின்றது.

பேக்கரியில் ரொட்டி, சுட்டுக் கொண்டிருக்கையில் வெடிப்பு சம்பவம் நடந்ததாக கருதப்படுகிறது. அந்த ரொட்டி வெடிப்பில் முற்றிலும் கருகிப்போயுள்ளது. அத்துடன் பல ரொட்டிகளும் கண்டறியப்பட்டுள்ளது. அதில், குறிப்பிட்ட பேக்கரியின் முத்திரையும் கண்டறிந்துள்ளனர்.

தற்போது இந்த ரொட்டி காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. அத்துடன் பாம்பீ நகர் சுற்றுலா தலமாக மாறியுள்ளது.

3
போக் வெண்ணெய் | Bog Butter

பழமை: 5000 ஆண்டுகள்!

அயர்லாந்து மக்கள் கிமு 1700 லிருந்து 17 ஆம் நூற்றாண்டு வரை நீண்ட காலம் வெண்ணை சேமிக்கும் பழக்கத்தை கொண்டிருந்தனர். இதை மக்கள் தரையில் புதைக்கப்பட்ட நிலையில் கண்டனர். முதலில் மெழுகு என்று நினைத்து குழப்பமடைந்து தோண்டி எடுத்தனர்.

இது 5000 ஆண்டுகள் பழமையானது என்று நம்பப்படுகின்றது. மக்கள் திருடர்களிடம் இருந்து வெண்ணையை பாதுகாக்க புதைத்திருக்கலாம் என்றும், பின்னாளில் நியாபகமின்றி எடுக்காமல் விட்டிருக்கலாம் என்று கூறுகின்றனர்.

இதை கண்டுபிடித்த போது ஒரு பீப்பாயில் கிட்டத்தட்ட 36 கிலோ வெண்ணை இருந்துள்ளது. மற்றொரு பீப்பாயில் 45 கிலோ வெண்ணை கண்டறியப்பட்டுள்ளது. இதை சுவைத்த சமையல்காரர் ஒருவர் மிகவும் அருமையாக இருப்பதாக தெரிவித்தார்.

4
சீன சூப் | Chinese Soup

பழமை: 1600 ஆண்டுகள்

2010 ஆம் ஆண்டில் கிமு 400 ல் இருந்த கல்லறை ஒன்றை சீன ஆய்வாளர் ஒருவர் திறந்தார். அதில், வெண்கலத்தாலான பாத்திரம் ஒன்று இருந்தது. அந்த பாத்திரத்தில் சூப் வைக்கப்பட்டிருந்ததை அவர் கண்டறிந்தார்.

அந்த வெண்கல பாத்திரம் பச்சை நிறத்தில் மாறியிருந்தது. அந்த சூப்பில் விலங்குகளின் எலும்பின் சுவை இருந்துள்ளது. அந்த எலும்பு எருதுகளுக்கு சொந்தமானவை என்றும், சூப் இறந்தவருக்கு அவரது பிற்பட்ட வாழ்க்கையில் சுவைக்க விருந்தளிக்க வைக்கப்பட்டதாக நம்பப்படுகிறது.

5
பிரிட்டிஷ் – எரிந்த ரொட்டி | Burnt British Bread

பழமை: 5500 ஆண்டுகள்

5500 ஆண்டுகள் பழமையானது என்று கருதப்படும் இந்த ரொட்டி துண்டுகள், முதலில் கண்டறியப்பட்ட போது கரித்துண்டுகள் என்று ஆய்வாளர்கள் நினைத்துள்ளனர். இது குறித்து ஆய்வு செய்த இடத்தில் கற்காலத்தில் உள்ள பல வகையான பொருட்கள் இருந்துள்ளது.

இது ரொட்டி துண்டு என்று பின்னர் கண்டறியப்பட்டது. அத்துடன் மண்பாண்டத் துண்டுகள், கல் கத்தி ஆகியவையும் இருந்துள்ளது. இது பழங்காலத்தில் தெய்வங்களுக்காக ரொட்டி தயாரித்து வைக்கப்பட்டது என்று ஒரு தரப்பினரால் நம்பப்படுகிறது.

6
ஜோர்டான் பிளாக்பிரெட் | Jordon Black Bread

பழமை: 14500 ஆண்டுகள்

ஜோர்டானில் 14,500 ஆண்டுகளுக்கு முந்தைய பிளாக்ரொட்டி கண்டறியப்பட்டது. அந்த பகுதியில் விவசாயம் பெருமளவில் செய்யப்பட்டு வந்ததாக நம்பப்படுகின்றது. இந்த ரொட்டிக்கும் பயிர்கள் வளர்ச்சிக்கும் தொடர்பு உள்ளது.

நேட்டூபியன் மக்கள் காடுகளில் வளரும் பார்லி மற்றும் ஓட்ஸிலிருந்து சேகரிக்கப்பட்ட தானியங்களை பயன்படுத்தினர். அவர்களை, சொந்தமாக விவசாயம் செய்யத் தூண்டிய சாதனம் ரொட்டியாகும். இந்த ரொட்டியை கண்டறிந்த ஆய்வாளர்கள் அதில் பயன்படுத்தப்பட்ட கிழங்கு வகையை கண்டறிந்தனர். இதன் மூலம் மாவு தயாரிக்கும் முயற்சியில் வெற்றி கிடைத்தது.

7
பண்டைய தேன் | Honey

பழமை: 3000 ஆண்டுகள்

உலகில் கெட்டுப் போகாத உணவுகளில் தேனும் ஒன்று. எகிப்தியர்கள் இறந்த உடல்களை பாதுகாக்கும் முயற்சியில், கல்லறையினுள் நீண்ட கால இருப்பிருக்கும் உணவுகளை வைப்பதாக நம்பப்படுகின்றது. அதில், 3000 ஆண்டுகள் பழமையான தேன் பானைகள் பிரமிடுக்கு அருகே கண்டுபிடிக்கப்பட்டன.

அதில் இருந்த தேன்கள் தற்போதும் சுவைக்கக் கூடியதாக இருந்தது. தேன் தவிர தேனீயின் மெழுகு மற்றும் தேன் கூடு ஆகியவையும் கண்டறியப்பட்டது.

8
சீனா நூடுல்ஸ் | Chinese Noodles

பழமை: 4000 ஆண்டுகள்

2005 ஆம் ஆண்டு 4000 ஆண்டுகள் பழமையான நூடுல்ஸ் கண்டறியப்பட்டது. திணை விதைகளில் தயாரிக்கப்பட்ட இந்த நூடுல்ஸ் 3 மீட்டர் வண்டல் மண்ணின் கீழ் கவிழ்ந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.

ஒரு பெரிய பூகம்பத்தால் அந்த இடம் முழுவதும் பாழடைந்தபோது அந்த நூடுல்ஸ் கிண்ணத்துடன் கவிழ்ந்ததாக நம்பப்படுகிறது. அந்த கிண்ணத்தின் மேல் சில குப்பைகள் விழுந்ததால் ஆக்ஸிஜன் உள்ளே புகாமல் இறுக்கமடைந்து காணப்பட்டுள்ளது.

இன்றும் சீனாவில் பல இடங்களில் திணை வகை நூடுல்ஸ்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. ஆனால், கோதுமை போன்ற தானியங்களால் தயாரிக்கப்பட்ட நூடுல்ஸ்கள் திணை வகை நூடுல்ஸ்கள் போன்று சுவையாக இல்லை.

9
ரோமானிய முட்டை | Roman Egg

Credit: OXFORD ARCHAEOLOGY

பழமை: 1700 ஆண்டுகள்

ரோமன் பிரிட்டனில் கி.பி 3 ஆம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது மக்கள் பக்தியின் பொருட்டு வீசப்பட்டதில் சிதையாமல் இருந்ததாக கருதப்படுகிறது. அதற்கு முன்பும் பல முட்டை துண்டுகள் கண்டறியப்பட்டது. ஆனால் இந்த முழுமையான முட்டை, கூடை ஒன்றில் கண்டெடுக்கப்பட்டது.

அதில், உடன் இருந்த மூன்று முட்டைகள் உடைந்து அழுகிய வாசனை வீசியுள்ளது. இந்த முட்டை மட்டும் உடையாமல் அப்படியே பாதுகாக்கப்பட்டுள்ளது.

10
எகிப்து பாலாடை கட்டி | Egypt Cheese

பழமை: 3200 ஆண்டுகள்

எகிப்தில் 1885 ல் கல்லறை ஒன்று கண்டறியப்பட்டது. அதை பற்றி ஆய்வில் 2010 ல் அது போன்ற பல கல்லறைகள் கண்டறிந்தனர். அந்த ஆய்வில் உடைந்த பானையில் துணியால் மூடப்பட்ட விசித்திரமான வெள்ளை நிறத்தாலான பொருள் இருப்பதை கண்டறிந்துள்ளனர். அது கிமு 13 ஆம் நூற்றாண்டில் தயாரிக்கப்பட்ட பாலாடை கட்டி என்பதை கண்டறிந்தனர்.

தொடர்ந்து அது குறித்த ஆய்வில் செம்மறி ஆட்டின் பாலில் இருந்து தயாரிக்கப்பட்டதாக கூறினர். ஆனால், மற்றொரு ஆய்வாளர் அந்த பாலாடை கட்டியில் கலப்படம் இல்லாத பாலில் உள்ள பாக்டீரியாக்கள் உள்ளன என்று தெரிவித்துள்ளார். இது மிகவும் ஆபத்தானது என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இவ்வாறு இன்றும் இந்த உணவுகள் உலகில் சேமிக்கப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

NeoTamil on Google News

அறிவியல், விண்வெளி, தொழில்நுட்பம், ஆராய்ச்சிகள், நிபுணர்களின் ஆலோசனைகள், போன்ற செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் NeoTamilஐ பின் தொடருங்கள். உங்கள் நண்பர்களுக்கும் தவறாமல் ஷேர் செய்யுங்கள்.

- Advertisment -
[td_block_1 custom_title="Must Read" limit="4" f_header_font_transform="uppercase" ajax_pagination="next_prev"]
error: Content is DMCA copyright protected!