28.5 C
Chennai
Friday, May 17, 2024

உலகில் உள்ள 5 அழகான உறையும் நீர்வீழ்ச்சிகள்!

Date:

கோடை காலத்தில், நீர்வீழ்ச்சிகள் மிகச்சிறந்த சுற்றுலாத் தலமாக கருதப்படுகின்றது. உயரமான மலைகளுக்கு சென்று இந்த நீர்வீழ்ச்சிகளை காண்பது உண்மையில் கண்களுக்கு விருந்தாக அமைகின்றது.

இவை நம்மை மெய் மறக்க செய்வது மட்டுமல்லாமல், கோடை காலத்தில் நம்மை குளிர்ச்சியாகவும் வைத்து கொள்ளும். உறைந்த நீர்வீழ்ச்சிகள் கொண்ட இந்த அழகான கண்கொள்ளாக் காட்சியைக் காண்பது நமக்கு சொர்க்கத்தில் இருப்பதை போன்ற உணர்வை தருகிறது.

Frozen Waterfalls007
Credit: pixabay.com/

உலகில் மிக அழகான ஐந்து நீர்வீழ்ச்சிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

1. பிளிட்வைஸ் நீர்வீழ்ச்சிகள், குரோஷியா (Plitvice Lakes National Park in Croatia)

Croatia National Park001 1
Credit: GETTY

குரோஷியாவில் உள்ள பிளிட்வைஸ் நீர்வீழ்ச்சியானது, பனிப்படர்ந்த காட்டுப்பகுதியில் அமைந்துள்ளது. இங்குள்ள சுண்ணாம்புக்கல் (limestone) மீது ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நீர் வழிந்து ஓடுவதால், இங்கு ஏராளமான ஏரிகள், குகைகள் மற்றும் நீர்வீழ்ச்சிகள் உண்டாக்கப்பட்டுள்ளன. இந்த புகழ் பெற்ற இடமானது, யுனெஸ்கோவின் (UNESCO) உலக பாரம்பரிய பட்டியலில் பட்டியலிடப்பட்ட ஒன்றாகும். மொத்தத்தில், இந்த இடத்தில் அமைந்துள்ள 10-திற்கும் அதிகமான ஏரிகளும், 5-க்கும் அதிகமான நீர்விழ்ச்சிகளும் இங்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு மறக்க முடியாத அனுபவத்தை வழங்குகின்றது.

2. காடபோஸ், ஐஸ்லாந்து நீர்வீழ்ச்சி (Godafoss Waterfall in Iceland)

Godafoss Waterfall 002
Credit: UNIVERSAL IMAGES GROUP VIA GETTY IMAGES

காடபோஸ் (Godafoss) என்பது தென்மேற்கு ஐஸ்லாந்தில் அமைந்துள்ள ஒரு சரித்திர புகழ் வாய்ந்த நீர்வீழ்ச்சி ஆகும். ஆற்றின் குறுக்கே அழகாக அமைந்திருக்கும் ஒரு சிறிய பாதை, ஐஸ்லாந்தில் மிகவும் பிரபலமான சுற்றுலா தலங்களில் ஒன்றாகும். இங்கு சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன்பு, பாதிரியாரும், ஐஸ்லாந்து நாடாளுமன்றத்தின் சட்ட சபாநாயகருமான தோர்கீர் தோர்கெல்சன் (Thorgeir Thorkelsson) என்பவர் கிறித்துவ மதத்தை பெருமளவு பரப்பினார். அவர், பழைய மதத்தின் சிலைகளை நீர்விழ்ச்சியில் தூக்கி எறிந்தார். இந்த இடமானது இன்றைய வைர வட்டம் (Diamond Circle) என்கின்ற இடத்தில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இங்கிருந்து, வரும் நீர்வீழ்ச்சிகள் 39 அடியிலிருந்து விழும், கிட்டத்தட்ட 100 அடி அகலம் கொண்டவை. மேலும், சூரிய ஒளியில் இருந்து பிரதிபலிப்பதால் நதி சில நேரங்களில் தனித்துவமாக செல்ல முடியும். குல்ஃபோஸ் ஐஸ்லாந்து நீர்மின்சாரத்தை பெருமளவில் உற்பத்தி செய்யும் இடமாகவும் திகழ்கிறது.

3. விஸ்கான்சினில் உள்ள அப்போஸ்தல் தீவுகள் மற்றும் பனி குகைகள் (Apostle Islands Ice Caves in Wisconsin)

Ice Caves Wisconsin003
Credit: GETTY

இயற்கை அழகு மிகுந்த அப்போஸ்தல் (Apostle) 21 தீவுகளை கொண்டுள்ளது. இதில், மலை உச்சிக்கு செல்லும் பாதைகள் எல்லாம் அழகாக மற்றும் கண்களுக்கு விருந்தாக அமைகிறது. இது கோடை மற்றும் குளிர்காலம் ஆகிய இரண்டிலும் சுற்றுலா பயணிகள் விரும்பும் இடமாக உள்ளது. இந்த இடமானது, ஊசி போன்ற பனிக்கட்டிகளை கொண்ட ‘சொர்க்க பூமி’ என்று அழைக்கப்படுகிறது.

4. சீனாவின் ஜியாஜுவோவில் உள்ள யுண்டாய் மலை, நீர்வீழ்ச்சிகள் (Yuntai Mountain in Jiaozuo in China’s Henan Province)

China Henan Province004
Credit: XINHUA NEWS AGENCY/GETTY IMAGES

சீனாவில் அமைந்துள்ள குய்ஷோவில் நீர்வீழ்ச்சியானது, சீனா மற்றும் கிழக்கு ஆசியாவின் மிகப்பெரிய நீர்வீழ்ச்சிகளில் ஒன்றாகும்.

சீனாவில் அமைந்துள்ள 59,000 ஏக்கர் பூங்கா, காடுகள், நூற்றுக்கணக்கான கவர்ச்சியான பூக்கள், அரிய மூலிகைகள், மலைகள், பள்ளத்தாக்குகள், ஏரிகள் மற்றும் பாதி உறைந்த நீர்வீழ்ச்சிகள், சுற்றுலா பயணிகளிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

எனவே, நீங்கள் இயற்கை காட்சிகளையும், அழகிய நீர்வீழ்ச்சிகளையும் காண விரும்பினால், இந்த இடம் உங்களுக்கு மறக்க முடியாத அனுபவத்தை நிச்சயம் வழங்கும்.

5. மின்னசோட்டவில் உள்ள மினேஹாஹா நீர்வீழ்ச்சி (Minnehaha Falls in Minneapolis, Minnesota)

Minnehaha Falls005
Credit: GETTY IMAGES

உலகெங்கிலும் உள்ள மிக அழகான நீர்வீழ்ச்சிகளில், மினேஹாஹா (Minnehaha Falls) நீர்வீழ்ச்சி ஒன்றாக கருதப்படுகிறது. கடந்த 1855 ஆம் ஆண்டில் ஹென்றி வாட்ஸ்வொர்த் லாங்ஃபெலோ (Henry Wadsworth Longfellow) எழுதிய “ஹியாவதாவின் பாடல்”. மூலம் இந்த நீர்விழ்ச்சியானது சரித்திர புகழ் வாய்ந்த ஒன்றாக கருதப்படுகிறது.

இங்கிருந்து, வரும் உறைந்த நீர்வீழ்ச்சிகள் நீலம் மற்றும் பச்சை வண்ணத்தில் 39 அடியிலிருந்து விழுவது, பார்ப்பவர் கண்களுக்கு விருந்தளிக்கிறது.

நீர்வீழ்ச்சிகள் இயற்கையின் சிறந்த படைப்புகளில் ஒன்றாகும். மேலும், அவை உங்கள் மன அழுத்தத்தை குறைத்து உங்களை மகிழ்ச்சியாக வைக்கும். எனவே, வாழ்நாளில் ஒரு முறையாவது இதுபோன்ற அழகிய நீர்வீழ்ச்சியை பார்த்து, மறக்க முடியாத நினைவினை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்!

Share post:

Popular

More like this
Related

கங்காரு (Kangaroo) பற்றி பலரும் அறிந்திடாத 10 சுவாரசியமான தகவல்கள்!

கங்காரு கங்காருக்கள் சக்திவாய்ந்த பின்னங்கால்கள், நீண்ட வலுவான வால் மற்றும் சிறிய...

புதன் கோள் (Mercury) பற்றி பலரும் அறிந்திடாத 10 சுவாரசிய தகவல்கள்!

புதன் கோள் நமது சூரிய குடும்பத்தில் உள்ள மிகச்சிறிய கோள். இது...

ஒட்டகம் (Camel) பற்றிய சுவாரஸ்யமான 8 தகவல்கள்!

ஒட்டகம் என்றவுடன் நம் நினைவிற்கு வருவது ஒட்டகங்கள் பாலைவனங்களில் வாழும் பெரிய...

வான்கோழி (Turkey) பற்றி பலரும் அறிந்திடாத 10 உண்மைகள்!

வான்கோழி எப்படி இருக்கும்? வான்கோழிகள் கோழியை விட பெரிதாக இருக்கும். சற்று...
error: Content is DMCA copyright protected!