28.5 C
Chennai
Thursday, May 2, 2024

காணாமல் போன நகரம் – 200 வருடங்களுக்குப் பின் தற்போது கண்டுபிடிப்பு!!

Date:

தென் ஆப்பிரிக்காவில் உள்ள தற்போதைய Suikerbosrand Nature Reserve (தென் ஆப்பிரிக்காவின் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி) ன் கீழே பலவித மண் அடுக்குகளுக்கு அடியில் மாண்டுபோன “கெவெனெங்” (Kweneng) என்ற பழைமை வாய்ந்த நகரம் தான் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Lost-city-Tenea
Credit: Ancient Origins

அகழ்வாராய்ச்சி

அகழ்வாராய்ச்சி தான்  முற்காலத்தில் நாம் தொலைத்த  வாழ்க்கை முறையையும்  தற்போது அனுபவித்து வரும் அறிவியல் பயன்பாடுகளின் இன்றியமையாமையையும் நமக்கு உணர்த்துகிறது. அதன்கொண்டே நம்முடைய சராசரி ஆயுட்காலம் உத்தேசமாக கணிக்கப்படுகிறது‌. ஆனால் பழைய முறைப்படி மட்கிய உயிரினங்களின் மிச்ச மீதியை தூரிகை கொண்டு சொரிந்துவிடுவதல்ல.  தற்போது உட்கார்ந்த இடத்திலேயே முன்னோர்கள் வாழ்ந்த ஊரையே வரைந்துவிடுகிறார்கள்.

கெவெனாங்

தென் ஆப்பிரிக்காவில் வாழும் “Tswana” இன மக்களின் (தற்போது Botswana வில் வசிப்பவர்கள்)  பூர்விகம் தான் இந்த கெவெனாங். ஏறத்தாழ 500 ஆண்டுகள் ஆயுட்காலம் கொண்டிருந்த (1400- 1900) இந்நகரம் வரலாற்று வழக்கம்போல போரால் தான் புதையுண்டு போனது. அங்கே வாழ்ந்த மக்களுக்களின் எழுத்தில் வரிவடிவம் இல்லை. அதனால் எவ்வித குறிப்பேடுகளும் கிடைக்கவில்லை. அவர்கள் வாழ்ந்த சுவடுகளும் தற்போது இல்லை. 1500 களில்தான் இங்கே வீடுகள் உருவாயிருக்க வேண்டும்.1800 களில்தான் இவை நகரமாக மாறியிருக்க வேண்டும். ஆனால் தற்போதுவரை  சில இடிபாடுகளே கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 1960 வரை பேசியே தோண்டிக்கொண்டிருந்தவர்கள் அதற்கு எட்டாண்டுகள் பிறகே திட்டத்தை வகுத்தார்கள். 2012 வாக்கில் கூகுள் உதவியால் கண்காணித்தபோதுதான் இந்நகரம் முன்னமே கணிக்கப்பட்டதைவிட இருமடங்கு பரப்பளவு கொண்டதாக இருப்பது தெரியவந்துள்ளது.

lost city
Credit: Mail & Guardian

LiDAR

இந்நகரைப் பற்றி முன்னரே ஆராய்ச்சியாளர்கள் அறிந்திருந்தாலும் அதைப்பற்றி அறிய பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியை சுரண்டி எழுப்ப முடியாது. எனவேதான் உதவிக்கு தொழில்நுட்பத்தை “ஒரு கை போடப்பா “ என அழைத்துள்ளனர். LiDAR – Light Detection And Ranging. நவீன ரேடார் கருவிகளின் மேம்படுத்தப்பட்ட பரிமாணம். ரேடாரானது ரேடியோ அலைகளைக் கொண்டு செயல்படுகிறது. LiDAR ஆனது அதிவேக லேசர் துடிப்புகளைக் கொண்டு செயல்படுகிறது. லட்சக்கணக்கான  லேசர் துடிப்புகளை (1,50,000 pulses per second) சிறிய விமானங்களிலிருந்து பூமியை நோக்கித் துளைப்பார்கள். லேசர் துடிப்புகள்  தரையில் மோதி திருப்பிச் செல்லும் கால இடைவெளிதான் தரைத் தளத்தில் உள்ள பொருட்களின் உயரமாகும். இவற்றின் உதவியால் மண்ணில் உள்ள சிறு கற்களின் முழுப் படத்தைக் கூட வரையமுடியும் இதே தொழில்நுட்பம்தான் நமது தெலுங்கானா மாநிலத்தின் கட்டப்பட்டு வரும் “பொலாவரம் அணையில்” பயன்படுத்தப்பட்டது.

Light Detection And Ranging
Credit: youtube

இந்த LiDAR தொழில்நுட்பம் மூலம் ஒட்டுமொத்த ஊரையும் கணினியில் முப்பரிமாணத்தில்  உயிரூட்டியுள்ளனர். இதன்மூலம் சுமார் 800 முதல் 900 காலனிகள் வரை இங்கே இருந்திருக்கலாம் எனத் தெரியவருகிறது. நகரின் இறுதிக் காலங்களில் சராசரியாக 5000 முதல் 10,000 குடும்பங்கள் இருந்திருக்கலாம் என கருதப்படுகிறது. அடுத்தடுத்த ஆய்வுகளைக் கொண்டே இப்பெரிய மக்கள்தொகை வரலாற்றில் இருந்து ஒதுங்கியதற்கான காரணம் தெரிய வரும். ஏனெனில் போரால்தான் இந்நகரத்திற்கு அழிவு நேர்ந்ததற்கான ஆதாரங்கள் தெளிவில்லாமல் உள்ளது. மேலும் சுகாதாரத்தில் சுமாரான நாடுகளான ஆப்பிரிக்க நாடுகள், புதுப்புது நோய்களுக்கு திறவுகோலாக இருந்துள்ளது. சிகா தொடங்கி எயிட்ஸ், எபோலா என பல சிக்கலான நோய்த்தொற்று ஆரம்பமானது ஆப்பிரிக்க நாடுகள்தான். எனவே நோய்த் தொற்றும் இந்நகரம் அழியக் காரணமாயிருந்திருக்கக் கூடும் என கருதப்படுகிறது. இன்னும் சில வாரங்களில் இந்த நகரத்தின் மொத்த ஜாதகமும் வெளிவந்துவிடும். அப்போது அழிவின் காரணம் என்ன என்பதை உங்களுக்குச் சொல்கிறோம்.

Share post:

Popular

More like this
Related

What Is So Fascinating About Marijuana News?

What Is So Fascinating About Marijuana News? ...

test

test test

கங்காரு (Kangaroo) பற்றி பலரும் அறிந்திடாத 10 சுவாரசியமான தகவல்கள்!

கங்காரு கங்காருக்கள் சக்திவாய்ந்த பின்னங்கால்கள், நீண்ட வலுவான வால் மற்றும் சிறிய...

புதன் கோள் (Mercury) பற்றி பலரும் அறிந்திடாத 10 சுவாரசிய தகவல்கள்!

புதன் கோள் நமது சூரிய குடும்பத்தில் உள்ள மிகச்சிறிய கோள். இது...
error: Content is DMCA copyright protected!