28.5 C
Chennai
Thursday, April 25, 2024

பனி மலைகளால் ஆன புது கிரகம் கண்டுபிடிப்பு !!

Date:

சூரியக் குடும்பத்திற்கு வெளியே மனிதர்கள் வாழத்தகுந்த கிரகங்களைக் கண்டுபிடிப்பதில் பெரும்பான்மையான வளர்ந்த நாடுகள் தீவிரம் காட்டி வருகின்றன. இந்நிலையில் சூரியனில் இருந்து 6 ஒளியாண்டுகள் தூரத்தில் உள்ள புது கிரகம் ஒன்று நாசாவால் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. Barnard என்னும் நட்சத்திரத்தை வலம் வரும் இந்த கிரகத்தில் பனிமலைகள் இருப்பதும் ஆராய்ச்சிகள் மூலம் தெரியவந்திருக்கிறது.

ஒளியாண்டு என்பது என்ன ?
ஒளி ஓராண்டில் கடக்கும் தொலைவே ஒளியாண்டு எனப்படுகிறது. ஒளியின் வேகம் வினாடிக்கு = 186000 மைல்கள்

பனி கிரகம்

இதுவரை மனிதர்கள் வாழ்வதற்கு ஓரளவுக்கு உகந்த சீதோஷ்ண நிலையினைப் பெற்ற கோள்கள் இரண்டு மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. ஒன்று நமது சூரியக்குடும்பத்தின் அருகே உள்ள நட்சத்திரக் கூட்டமான ப்ராக்சிமா செண்டாரியை சுற்றிவரும் ப்ராக்சிமா செண்டாரி B கோள். மற்றொன்று இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் Barnard B கோள். Barnard நட்சத்திரத்தை இந்தக்கோள் சுற்றிவருதால் இப்பெயர் வைக்கப்பட்டுள்ளது.

barnards-star-new-planet
Credit: IEEC Science

சூரியனிலிருந்து புதன் கிரகம் வரை உள்ள தொலைவும் Barnard நட்சத்திரத்திலிருந்து Barnard B அமைந்திருக்கும் தொலைவும் சமம் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். பூமியை விட எடை குறைந்த இந்தப் புதிய கோள் முழுவதும் பனி மலைகள் உறைந்து போய் காணப்படுகிறது. சராசரி வெப்பநிலை – 274 டிகிரி பாரன்ஹீட் இருக்கும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

Barnard நட்சத்திரம்

சூரியக்குடும்பத்திற்கு வெளியே உள்ள ஒரே ஒரு தனித்திருக்கும் நட்சத்திரம் Barnard மட்டும்தான். (மற்றவை எல்லாம் பெரும்பாலும் நட்சத்திரக் கூட்டங்களாகவே இருக்கும்). அமெரிக்காவின் புகழ்பெற்ற விண்வெளித்துறை ஆராய்ச்சியாளரான Edward Emerson Barnard என்பவற்றின் நினைவாக அந்த நட்சத்திரத்திற்கு Barnard எனப் பெயரிடப்பட்டுள்ளது. சூரியனிலிருந்து வெளிப்படும் கதிர்களில் 0.4 அளவுள்ள ஒளி இந்த நட்சத்திரத்தை சென்றடைகிறது. பூமியின் மீதுபடும் சூரிய ஒளியில் இது 2 % ஆகும். சூரியனை விடக் குளிர்ந்த மற்றும் நிறை குறைவான நட்சத்திரம் இது என்பதால் இதனால் ஒளியினைப் பிரதிபலிக்க முடியாது.

exoplanet-barnards-star-new-planet
Credit: NASA – JBL

நாசாவின் வெளிப்புற கிரகத் தேடல்களுக்கென்று அனுப்பப்பட்ட WFIRST (Wide Field Infrared Survey Telescope) தொலைநோக்கி இந்தப் புதிய கோளினைப் பற்றி ஆராய்ச்சி செய்துவருகிறது. மனித குடியேற்றத்திற்கான சாத்தியக்கூறுகளை இந்த தொலைநோக்கி ஆய்வு செய்து பூமிக்குத் தகவல்களை அனுப்பும். மனித குலத்தின் எதிர்கால வாழ்விடத் தேடல்களின் ஒரு புது நம்பிக்கை இந்த Barnard B கிரகம் எனலாம்.

Share post:

Popular

More like this
Related

கங்காரு (Kangaroo) பற்றி பலரும் அறிந்திடாத 10 சுவாரசியமான தகவல்கள்!

கங்காரு கங்காருக்கள் சக்திவாய்ந்த பின்னங்கால்கள், நீண்ட வலுவான வால் மற்றும் சிறிய...

புதன் கோள் (Mercury) பற்றி பலரும் அறிந்திடாத 10 சுவாரசிய தகவல்கள்!

புதன் கோள் நமது சூரிய குடும்பத்தில் உள்ள மிகச்சிறிய கோள். இது...

ஒட்டகம் (Camel) பற்றிய சுவாரஸ்யமான 8 தகவல்கள்!

ஒட்டகம் என்றவுடன் நம் நினைவிற்கு வருவது ஒட்டகங்கள் பாலைவனங்களில் வாழும் பெரிய...

வான்கோழி (Turkey) பற்றி பலரும் அறிந்திடாத 10 உண்மைகள்!

வான்கோழி எப்படி இருக்கும்? வான்கோழிகள் கோழியை விட பெரிதாக இருக்கும். சற்று...
error: Content is DMCA copyright protected!