தொழில் முனைவோர்

52,000 கோடியை ஏழைகளுக்கு வழங்கிய இந்தியர்!

இந்தியாவின் இரண்டாவது பெரிய பணக்காரரான அசிம் பிரேம்ஜி தான் இந்த மகத்தான செயலைப் செய்திருக்கிறார். சமூக முன்னேற்ற திட்டங்களுக்கு மேலும் 56,700 கோடி ரூபாயை ஒதுக்குவதாக பிரேம்ஜி அறிவித்திருப்பது உலகம் முழுவதும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை சமூக மற்றும் கல்வி அறக்கட்டளைக்கு இவர் அளித்திருக்கும் தொகை  1.45 லட்சம் கோடி ஆகும்.

பில்கேட்ஸ்-ன் திட்டம்

வறுமை ஒழிப்பு, ஏழைகளுக்கு இலவச கல்வி அளித்தல் போன்ற செயல்களை உலகம் முழுவதும் மேற்கொள்ள பில்கேட்ஸ் மற்றும் வாரன் பபெட் ஆகியோர் டி.ஜி.பி  என்னும் திட்டத்தை துவங்கி செயல்படுத்தி வருகின்றனர். அதன்படி உலக பணக்காரர்கள் தங்களது மொத்த சொத்தில் 50 சதவிகிதத்தை இந்த அறக்கட்டளைக்கு வழங்கவேண்டும். இத்திட்டத்தில் இந்தியாவிலிருந்து இணைந்த முதல்நபர் அசிம் பிரேம்ஜிதான்.

அசிம் பிரேம்ஜிக்கு கிடைக்கும் 1 டாலர் தொகையில் 67% வளர்ச்சிப்பணிகளுக்கு அளிக்கப்படுகின்றன.

வருமானம்

விப்ரோ நிறுவனத்தை நிறுவியவர் அவரது தந்தை ஹஷம் பிரேம்ஜியால் துவங்கப்பட்டது. ஆரம்பத்தில் வீட்டுவசதி மற்றும் எண்ணெய் தொழில்களை மேற்கொண்டுவந்த இந்நிறுவனம் அசிம் பதவியேற்றவுடன் ஐ.டி துறையில் கால்பதித்தது. பெங்களூருவைத் தலைமையிடமாகக்கொண்டு இயங்கும் இந்நிறுவனத்தில் 1,60,000 க்கும் அதிகமானோர் பணிபுரிகின்றனர்.

இந்திய அளவில் மிகப்பெரிய ஐ.டி நிறுவனமான விப்ரோவின் 74 சதவீத பங்குகள் பிரேம்ஜியின் குடும்பத்தாரிடம் உள்ளன. எனினும், இப்பங்குகளில் அதிகபட்சமாக 7 சதவீதம் மூலம் கிடைக்கும் ஆதாயம் தான் பிரேம்ஜிக்கு கிடைக்கிறது. மாற்றவை எல்லாம் ஏழைகளுக்கு!!

இந்தியா முழுவதும் இயங்கும் 150 க்கும் அதிகமான தனியார் தொண்டு நிறுவனங்களுக்கு அசிம் பிரேம்ஜி உதவி செய்துவருகிறார்.

67 %

விப்ரோ நிறுவனத்தைத் தவிர இந்தியாவில் மற்ற நிறுவனங்களின் மீது செய்யப்பட்டிருக்கும் முதலீடு, பங்கு விற்பனை, வட்டி ஆகியவை அனைத்துமே தொண்டு நிறுவனங்களுக்கு அளிக்கப்படுகின்றன. அசிம் பிரேம்ஜிக்கு கிடைக்கும் 1 டாலர் தொகையில் 67% வளர்ச்சிப்பணிகளுக்கு அளிக்கப்படுகின்றன.

இந்தியாவில்….

இந்தியாவில் கர்நாடகா, உத்தரகண்ட், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலுங்கானா, மத்திய பிரதேசம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் செயல்பட்டுவரும் அரசுப் பள்ளிகளின் தரத்தினை உயர்த்த பெரும்பணம் விப்ரோ நிறுவனத்தால் அளிக்கப்படுகிறது. மேலும் இந்தியா முழுவதும் இயங்கும் 150க்கும் அதிகமான தனியார் தொண்டு நிறுவனங்களுக்கு அசிம் பிரேம்ஜி உதவி செய்துவருகிறார்.

 

Show comments